Header Ads

Breaking News
recent

காத்தான்குடி வர்த்தக சங்கம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்


எமது பகுதியில் சிறு கொத்தனியாக Covid 19 கொரோனா தொற்றுக்குள்ளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், ஏற்படும் பாரதூரமான நிலமைகளைத் தவிர்த்துக்கொள்ளும் முகமாக பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று முதல் காத்தான்குடியிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களையும் இரவு 8.30 மணிக்கு முன்பதாகவே மூடி விடுமாறு அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

 அத்தோடு அவசியமின்றி வீதியில் பயணிப்பது, கூட்டங்கூடுவது, பேசிக்கொண்டு நிற்பது போன்ற விடயங்களை கண்டிப்பாக தவிர்ந்துகொள்ளுமாறு விநயமாக வேண்டுகின்றோம். 

அத்தோடு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து காத்தான்குடிக்கு வருகை தந்திருப்போர் தங்களது தனிமைப்படுத்தல் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு தயவு செய்து வீட்டை விட்டு வெளியேறுவதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுமிடத்து எம்மைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். 


தொடர்புகளுக்கு :

M.M. ஆரிப்  -  077 222 5588

M. நஸீம் - 077 124 8800

M. ஸஹீர் -  077 644 5533

M. ஸபீல் - 077 699 4295

M. றஹீம் ஹாஜி - 077 644 6900


நன்றி.
தலைவர், செயலாளர்
வர்த்தக சங்கம்
காத்தான்குடி.

Powered by Blogger.