Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை அண்மித்துள்ளது : முழு விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 639 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவுத்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாவது அலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 697 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 545 பேர் குணமடைந்து நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 545 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 884 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் 12 இலட்சத்து 23 ஆயிரத்து 582 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.