Header Ads

Breaking News
recent

எமது உறவுகளை சிறை மீட்போம் - யாழில் ஆர்ப்பாட்டம்

 அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நல்லூரின் பின்பகுதியில் நடந்தது.



"கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே"

"விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்"

 "கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளும் மனிதர்களே"

‘சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியாக அரசு பாகுபாடு காட்டாதே "

போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.



இந்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொது மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.