பொலிஸார் தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறிவிட்டனர் – சட்ட மா அதிபர்
சிறைச்சாலைகளில் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை பொலிஸார் பின்பற்றத் தவறிவிட்டதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சின் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி, சிறைச்சாலைகளில் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு சட்ட மா அதிபர் இரண்டு தடவைகள் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, கடந்த ஏப்பிரல் மாதம் முதல் அறிவுறுத்தலை வழங்கியதாகவும், அதனை நடைமுறைப்படுத்தி இருந்தால் மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருக்காது எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
