Header Ads

Breaking News
recent

பிரதேச சபையின் தவிசாளருக்குக் கொரோனா


அக்கரபத்தனை பிரதேசசபை தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலவாக்களை லிந்துல பொதுசுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 09 ஆம் திகதி டோன்பீல்ட் தோட்டத்தில் மரண வீடொன்றுக்கு, கொழும்பிலிருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

 இந்த மரண வீட்டில் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 300 கலந்துக்கொண்டிருந்தாகவும் தலவாக்களை லிந்துல பொதுசுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ´´டோன்பீல்ட் தோட்டத்தில் மரண வீட்டில் கலந்துக்கொண்டிருந்த 300 தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் 5 வயது பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மரண வீட்டுக்குச் சென்றிருந்த அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் பிசிஆர் பரிசோதனைகளை புறக்கணித்து வந்திருந்தார்.

 பின்னர் 14 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு அன்றைய தினமே பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரதுப் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேறக (20) வெளியாகியுள்ளது.

 இதில் அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தவிசாளரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அக்கரப்பத்தனை பிரதேசசபை தற்காலிகமாக மூடப்பட உள்ளது. 

நுவரெலியா நோர்வுட் கொட்டகலை மஸ்கெலியா ஆகிய பிரதேசசபைகளின் தலைவரகள் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தபட உள்ளதோடு தனிமைபடுத்தல் சட்டத்திட்டங்களை மீறிய அக்கரபத்னை பிரதேசசபை தலைவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட உள்ளதாக தலவாகலை லிந்துளை பொதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Powered by Blogger.