Header Ads

Breaking News
recent

வரலாற்றில் இன்று !!!!!!!


திசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
👉640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

👉820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.

👉1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1]

👉1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.

👉1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.

👉1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.

👉1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.

👉1851 – அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.

👉1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.

👉1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.

👉1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.

👉1914 – முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

👉1924 – அல்பேனியா குடியரசாகியது.

👉1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.

👉1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.

👉1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.

👉1966 – அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.
Powered by Blogger.