Header Ads

Breaking News
recent

துப்பாக்கி மீட்கப்பட்ட முந்திரிகைத் தோட்ட உரிமையாளரான ஆசிரியர் மீது விசாரணை

 மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முந்திரித்தோட்டம் ஒன்றில் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலித்தீன் பை ஒன்றினால் சுற்றி வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி ஒன்றையும், 49 ரவைகளையும், 2 மகசீன்களையும் இன்று (29) மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.


பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான இன்று (29) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முந்தியரிய தோட்டம் ஒன்றில் சோதனை நடவடிக்கையின் போது மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி ,2 மகசீன் மற்றும் 49 ரவைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர் .

இவ்வாறு துப்பாக்கி மீட்கப்பட்ட முந்திரிகைத் தோட்ட உரிமையாளரான ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.


Powered by Blogger.