மன்னார் - பொற்கேணி நிருவாக சபையின் திடீர் அறிவிப்பு
(முஸாதிக் - முசலியூரான்)
மன்னார் - பொற்கேணி நிருவாக சபையின் நேற்றைய தீர்மானத்திற்கு இணங்க பொற்கேணியில் உள்ள எந்தவொரு கடையிலும்
"புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதில்லை"
என்ற செயற்திட்டத்திற்கு அமைய அனைத்து கடை உரிமையாளர்களையும் நேற்று இரவு பள்ளி நிருவாக சபைஉறுப்பினர்கள் சந்தித்து எமது செயற்திட்டத்திற்கு ஆதரவு கோரியபோது அனைத்து கடை உரிமையாளர்களும் பூரண ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள்..
எல்லாக் கடைகளிலும்
"எமது எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி புகைத்தல் பொருட்கள் விற்பனையை நிறுத்தியுள்ளோம்"
என்ற வாசகம் அடங்கிய அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் புகைத்தல் பொருட்கள் விற்பனை முற்றாக நிறுத்தப்படும்..
அனைவரும் ஒன்றிணைந்து முசலிப் பிரதேசத்தில் முன்மாதிரிக் கிராமமாக பொற்கேணியை மாற்றுவோம்

