Header Ads

Breaking News
recent

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் இருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது !!!!



(கிண்ணியா நிருபர் - முணீஸ்)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr.AMM.அஜித் அவர்கள் விடுக்கும் அறிவித்தல். 

கிண்ணியாவில் மேலும் இரு பொலிஸாருக்கு கொரோனா தொற்று Positive   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பலருக்கும் தொற்றும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக  கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr.AMM.அஜித் அவார்கள் தெரிவித்துள்ளார்.




மேலும் இதற்கான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. எனவே பொது மக்களாகிய நீங்கள் பொறுப்புடனும் மற்றும் பொறுமையுடனும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகைகளை செயற்படுத்தும் பட்சத்தில் இந்த சமூகப்பரவலை வெற்றி கொள்ளமுடியும். என MOH அவர்கள் தெரிவித்தார். 

மேலும் கொரோனா தொற்றுக்கு இளைஞர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதனால் இளைஞர்களும் பொறுப்புடன் செயற்படும் சந்தர்ப்பமாகும். 

எமது சுகாதார துறைனருக்கும், பாதுகாப்பு துறைனருக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக் கொண்டார்.
Powered by Blogger.