முல்லைதீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் சிறப்பாக இடம்பெற்றது
இவ்வருடத்திற்கான இறுதி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களான, வட மாகாண ஆளுனர், மதிப்பிற்குரிய திருமதி. P .M சார்ள்ஸ் மற்றும் முன்னாள் பிரதியமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில்
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நாகராதலிங்கம் ஆகியோரின் பங்கேற்போடு இன்று (19.12.2020) முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தாழ் நிலப்பிரதேசங்களில் காணப்படும் குளங்களை அவசரமாக புனரமைப்பது சம்பந்தமாகவும், வட்டுவாகல் பாலம் மற்றும் கொக்கிலாய் பாலங்கள் சம்பந்தமாகவும் ,கிராமிய வீடமைப்பு சம்பந்தமாகவும், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடை செய்வது சம்பந்தமாகவும், தொடராக பேசப்பட்டு வரும் காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும்
வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், கல்வி சம்பந்தமாகவும் , கொரோனா (Covid -19) விஷயம் சம்பந்தமாகவும், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் பல்வேறு செயற்றிட்டங்கள் பற்றியும் இது போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


