Header Ads

Breaking News
recent

உழவு இயந்திரத்திற்குள் சிக்கிய மோட்டார் சைக்கிள் - மகன் பலி

மகன் பலி! தந்தை படுகாயம்!          

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரம் மீராவோடை பகுதில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து பட்டா வாகனத்திற்கு இடம் கொடுத்த சந்தர்ப்பத்தில் உழவு இயந்திரத்துக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்திச்செல்வதற்கு முயற்சித்த போதே உழவு இயந்திரத்தில் மோதுண்டதிலேயே  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வாழைச்சேனை விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனுமே முன்னால் சென்ற உழவு இயந்திரத்தில் மோதுண்டதில் ஜெயசீலன் கிரிஜன்(18) என்பவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Powered by Blogger.