Header Ads

Breaking News
recent

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!!!


முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்க்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய வட பகுதியைச் சேர்ந்த எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.