வெள்ளத்தில் மூழ்கிய முள்ளிப்பொத்தானை ஜாமியாநகர் : பிரதேச செயலக உறுப்பினர்கள் கள விஜயம் !!!
முள்ளிப்பொத்தானைஜாமியாநகர் நேற்று பெய்த கடும் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கி இருந்தது. இன்று காலையில் தம்பலகாமம் பிரதேச செயலக செயலாளரும், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளரும் ஒன்றிணைந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு, இவ் வேலை ஆரம்பம் முதல் முடியும் வரை இத்தளத்திலே இருந்து முழுமையாக கஷ்டப் பட்டார்கள். இவர்களோடு பிரதேச சபை உறுப்பினர்கள், ADP, CO, TO, GS, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள், இப்பிரதேச மக்கள்கள் அனைவரும் இவ் வேலை செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். அனைவருக்கும் இக்கிராமம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



