Header Ads

Breaking News
recent

திருமலை இறைச்சி கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 திருகோணமலை நகர சபை பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள நகர சபைக்கு சொந்தமான இறைச்சிக் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இறைச்சிக்கடை மூடப்பட்டதுடன் அதனை அண்டிய ஆட்டிறைச்சிக் கடை, கோழியிறைச்சிக் கடை ஆகியன மூடப்பட்டதுடன் தொற்று உறுதியான ஊழியரும் அவரின் குடும்ப உறுப்பினர்களான இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று நபர்களுக்கும் இன்று மதியம் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பி.சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தொற்று உறுதியான திருகோணமலை ஜமாலியா பிரதேசவாசியான மாட்டிறைச்சிக் கடை ஊழியர் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கபடுவதற்கான நடவடிக்கைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Powered by Blogger.