Header Ads

Breaking News
recent

சற்றுமுன் கிடைத்த செய்தி : திருகோணமலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!


(திருமலை நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 பாடசாலை மாணவர்கள் உட்பட 23 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்ககையில் இதனைத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், திருமலை நகரில் முருகாபுரி, ஜின்னானகர், அபயபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை சுகாதார பரிசோதகர் பிரிவு ஜமாலியா பிரதேசத்தில் 16 தொற்றாளர்களும், துளசி புரம் பகுதியில் ஒருவரும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருமாக இவ்வாறு 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரை பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 778 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் திருகோணமலை மாவட்டத்தில் 40 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 102 பேரும், அம்பாறையில் மாவட்டத்தில் 23 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 613 பேரும் கொரோனா தொற்றுடக் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.