Header Ads

Breaking News
recent

கல்முனை,சாய்ந்தமருது பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்படலாம் : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை!!!!






இதனை தடுக்க எங்களோடு சேர்ந்து பணியாற்ற மக்கள் முன்வர வேண்டும் கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் உக்கிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எல்லோருடைய உதவியும் பங்களிப்பும் அவசியம் என குறிப்பிட்டார்

தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தல், சிறுவர்கள், பெரியவர்கள் வெளியேறுதலை முற்றாகத் தவிர்த்தல், வீதிகள், தெருக்கள், சந்திகளில் மைதானங்களில் தேவையின்றிக் கூடுதல் விளையாடுதல் என்பனவற்றை தவிர்த்தல் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லுதல், எந்த நிலையிலும் 5 அடி சமூக இடைவெளி பேணிக் கொள்ளல்,கொரோனா வைரஸ் அதிகமுள்ள அபாய பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்தல், அடிக்கடி இரு கைகளையும் சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவுதல்,போன்ற சுகாதார செயற்பாடுகளை மக்கள் கடைப்பிட்டிது நடக்க வேண்டும்.


இதேவேளை சுகாதார நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டதுடன் இந்த திட்டத்துக்காக பொலிஸ் மற்றும் முப்படையினர், சுகாதார திணைக்களத்தினைச் சேர்ந்த சேவைக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

Powered by Blogger.