Header Ads

Breaking News
recent

காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு : தேசிய தொடர்பாடல் குழு நியமனம்


(புத்தளம் - சயானா)
காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு தேசிய தொடர்பாடல் குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

2016ம் ஆண்டில் 4,211 கிலோ மீற்றர் யானை வேலி அமைக்கப்பட்டிருந்தும் அவை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இதனால் குறுகிய காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

யானை வேலிகளை பராமரிப்பதற்காக வருடம் ஒன்றுக்கு 86 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.