Header Ads

Breaking News
recent

பாடசாலை மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது!!!!


நுவரெலிய மாவட்டத்தின் நோர்வூட் பகுதியில் 10 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நோர்வூட் தமிழ் மகா விதியாலய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் பொகவந்தலாவ சுகாதர வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 47 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தொற்றாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் நேற்று இரவு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணிய 20 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.