Header Ads

Breaking News
recent

லொறி- முற்சக்கரவண்டி விபத்து-சாரதிக்கு விளக்கமறியல்!!


(பதுர்தீன் சியானா)
திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி ஜயபுர பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சாரதியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஸானி தேனபது முன்னிலையில் இன்று (08) மாலை குறித்த சாரதியை ஆஜர்படுத்திய போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஊறுபொக்க,கெதலான,கதன்ஹேனவத்த பகுதியைச் சேர்ந்த பத்தினிகே பியனந்த (58வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


திருகோணமலையில் இருந்து கொழும்பிற்கு சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் எதிர்திசையாக வந்த முச்சக்கரவண்டி மோதியதானாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
Powered by Blogger.