Header Ads

Breaking News
recent

வெடிக்காத நிலையில் லோஞ்சர் ரக குண்டு மீட்பு!!!!



(பாறுக் ஷிஹான்) 
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (23) மதியம் பொது மக்கள் வழங்கி தகவலுக்கமைய காணியொன்றிலிருந்து இக்குண்டு மீட்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன், குண்டினையும் மீட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஜி.ரி.ஜி எம்.எம் 40 குண்டினை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய செயலிழப்புச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குண்டு மீட்கப்பட்ட பகுதியானது, கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகச் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.