இலங்கை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இன்று கிழக்கில்!
இலங்கை இராணுவ சேவைக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் முப்பத்தையாயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடிப் பிரதேச செயலகப்பிரிவில் இளைஞர், யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வு பல இளைஞர்கள் கலந்து கொண்டதுடன், குறித்த நேர்முகத்தேர்வில் இராணுவ உயரதிகாரிகள், சமூக சேவையாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இராணுவப் படையில் பணியாற்ற விரும்பும் இளைஞர், யுவதிகளை இன மற்றும் பிரதேச வேறுபாடின்றி இணைத்துக் கொள்ளும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

