Header Ads

Breaking News
recent

கொரோனாவால் பாதிக்கப் பட்ட நடிகர் சரத்குமார்!!!!


கொரோனா வைரஸ் தனது ஆட்டதை நிறுத்தியதாக இல்லை, பல கோடி மக்கள் இதனால் பாதிக்கப் பட்டதுடன் பல லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். எல்லா நாடுகளிலும் கொரோனாவை தடுப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் எம் நட்டில் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டோம்.

இதனால் ஆபத்தான கொரோனா வைரஸ் பற்றி சிறிதளவும் கவலை படாமல் இருக்கிறோம், ஆனால் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த சிலர் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் படி கூறி வருகின்றனர்.

அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சரத் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியே இருந்து பார்க்கும் போது கொரோனா வைரஸ் சாதாரணமாக தெரிந்தாலும் பாதிக்கப் பட்ட பின்னரே அதன் கடினம் புரிகிறது.

கொரோனாவில் பாதிக்கப் படுவது என்பது மரணித்து மீண்டும் உயிர் பிழைப்பது தான், தயவுசெய்து கொரோனா வைரஸை சாதாரணமாக நினைக்காதீர்கள், இதில் இருந்து நாமும் பாதுகாப்பாக இருந்து மற்றவர்களையும் பாதுகாப்பது எமது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.