pfizer / biontech என்னும் கொரோனா தடுப்புமருந்து : சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி!!!!
pfizer / biontech என்னும் கொரோனா தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, குறித்த தடுப்பூசிகளை இந்தமாத இறுதிக்குள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ( Lee Hsien Loong) தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக சிங்கப்பூரின் தேசிய தொலைக்காட்சியில் இன்று மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வருட காலாண்டிற்குள் தமது நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் இலவசமாக குறித்த தடுப்பூசியனை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த தடுப்பூசியினை முதலில் சுகாதாரத் தரப்பினர், முதியவர்கள், முதல்நிலை ஊழியர்கள் மற்றும் அவசரத்தேவையுடையவர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த தடுப்பூசியினை தாமும், தமது அரசாங்கத்தினது உயர் அதிகாரிகளும் முதலில் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு போதிய தெளிவுபடுத்தல்களை வழங்கவுள்ளதாகவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
