நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 : முழு விபரம் உள்ளே!!!!
அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்று முன்னர் விடுத்த ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டாரகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர், தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய இருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
