Header Ads

Breaking News
recent

NB 9268 இலக்க பேருந்தில் பயணித்த பயணிகள் கவனத்திற்கு



பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (31) காலை தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் தொடர்பில் பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளனர்.




குறித்த 5 சிறைக்கைதிகளும் பொலன்றுவையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த NB 9268 என்ற பேருந்தின் ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்து இன்று காலை 5.45 மணியளவில் பொலன்றுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த பேருந்தில் பயணித்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

Powered by Blogger.