Header Ads

Breaking News
recent

YouTube Channel சுமார் 560 கோடி இலங்கை ரூபா சம்பாதித்த 9வயது சிறுவன்!!


யூரியூப் இணையத்தளத்தில் இவ்வருடம் அதிகம் வருமானம் பெற்றவர்களின் பட்டியலில் 9 வயதான ஒரு சிறுவன் முதலிடம் பெற்றுள்ளான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரையன் காஜி எனும் இச்சிறுவன் 2.95 கோடி டொலர்களை (சுமார் 560 கோடி இலங்கை ரூபா, சுமார் 217 கோடி இந்திய ரூபா) வருமானமாகப் பெற்றுள்ளான் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் உண்மையான பெயர் ரையன் குவான் ஆகும். 2015 ஆம் ஆண்டு 4 வயதானபோது அவன் யூரியூப் வீடியோக்களை தயாரிக்க ஆரம்பித்தான் கடந்த 3 வருடங்காளக யூரியூப்பில் அதிக வருமானம் பெற்றவர்களின் பட்டியலில் அவன் முதலிடம் பெற்றுள்ளான்.

ஆரம்பத்தில் அவனின் வீடியோ செனல் என ரையன் டோய்ஸ்ரிவியூ என அழைக்கப்பட்டது. விளையாட்டுப் பொருட்களை பரீட்சித்து விமர்சிக்கும் வீடியோக்களினால் ரையன் புகழ்பெற்றான்.

தற்போது தனது குடும்பத்தினருடன் இணைந்து 9 யூரியூப் செனல்களை ரையன் நடத்துகிறான். அவற்றில் பல செனல்களை மில்லியன் கணக்கானோர் சப்ஸ்கிறைப் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

YouTube : https://www.youtube.com/watch?v=jzsMA75C2WU

https://www.youtube.com/channel/UCf7LD_-_AM3_CdGs9RMPKiw
Powered by Blogger.