கடந்த 12மணித்தியாலங்களில் கிழக்கில் 60 பேருக்கு தொற்று : கிழக்கில் தொற்று 1,600 ஐ தாண்டியது!!

(எம் .ஜே பஸ்லின்)
கடந்த 12மணித்தியாலங்களில் கிழக்கில் 60 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வாரம் கிழக்கின் கொரோனா அபாய வலயமாக காணப்படும் காத்தான்குடி சுகாதார பிரிவு இந்த வாரத்தில் மாத்திரம் 78 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள
அதேவேளை, கடந்து மூன்று நாட்களில் 6,4,2 என குறைந்து செல்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்றைய தொற்றாளர்களின் விபரம் :-
👉கோமரங்கடவளை - 01 (08)
👉கிண்ணியா - 05 (26)
👉கல்முனை தெற்கு - 15 (244)
👉சாய்ந்தமருது - 03 (59)
👉காரைதீவு - 13 (34)
👉நாவிதன்வெளி - 01 (19)
👉மட்டக்களப்பு - 06 (27)
👉காத்தான்குடி - 02 (158)
👉களுவாஞ்சிக்குடி - 02 (33)
👉கோறளைப்பற்று மத்தி - 02 (72)
👉ஆரையம்பதி - 04 (09)
👉அம்பாரை - 02 (24)
👉உஹன - 01 (26)
இதன் மூலம் கிழக்கில் கொரோனா தொற்று எண்ணிக்கை மொத்தமாக 1,647 ஆக அதிகரிக்கின்றது.