Header Ads

Breaking News
recent

இரணைமடு குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு : தாழ் நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!!!



இரணைமடு குளத்தின் வரத்து நீர் காரணமாக 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.



இது குறித்து சற்று முன்னதாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இரணைமடு குளத்தின் வரத்து நீர் காரணமாக 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது. எனவே இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேவேளை பரவலாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதால் ஏனைய குளங்களின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.
Powered by Blogger.