ஓட்டமாவடியில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!!
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பபு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (10) வரை 40 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உறவினர்களுக்கு கடந்த 09.01.2021ம் திகதி மாலை உலமா சபைக்கட்டடத்தில் 84 பேருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளர்.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதனைத் தடுக்கும் நோக்கில் பிரதேச செயலகம், பிரதேச சபை, இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.


