Header Ads

Breaking News
recent

பெரிய கல்லாற்றில் உயிர் இழந்த 12 வயது சிறுமியின் மரணம் : ஆளுநர் கவனத்திற்கு!!!



சில தினங்களுக்கு முன்னர் பெரிய கல்லாற்றில் உயிர் இழந்த 12 வயது சிறுமியின் மரணமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவமாகும். ஆனாலும் இதுவரைக்கும் குழந்தையின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையிலான செயற்பாடுகள் எதுவும் ஆக்கபூர்வமாக இடம்பெறாத நிலையில்...

18.01.2021 நேற்று குறித்த சம்பவமானது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் திரு த.ஹரிப் பிரதாப் அவர்களால் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி. அனுராதா ஜகம்பத் அம்மணி அவர்களின் கவனத்துக் கொண்டுவரப்பட்டது.


இதனைத்தொடர்ந்து சிறுமியின் மரணத்தின் பின்னணியை விரிவாக கேட்டறிந்த ஆளுநர் அவர்கள், உடனடியாக கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்து அவரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்ததுடன், உடனடியாக தனியாக ஒரு பொலிஸ் குழுவை அமைத்து நாளைய தினமே சிறுமியின் மரணத்துக்கான விசாரணையை ஆரம்பிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபரை ஆளுநர் அவர்கள் பணித்துள்ளார். 

இதற்கு அமைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளி விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினுடைய எதிர்பார்ப்புமாகும்.
Powered by Blogger.