திருமலையில் இரு தனியார் வங்கி ஊழியர்களுக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!
திருகோணமலை நகரில் ஏகாம்பரம் வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஊழியர்கள் 10 நபர்களுக்கு கடந்த (7)திகதி எடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று வெளியானதை அடுத்து தனியார் வங்கி ஊழியர் இருவருக்கு கொவிட்19 உறுதி செய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் திருகோணமலை நகரில் மின்சார நிலைய வீதி,வடகரை வீதியில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.
இருவரையும் பொருத்தமான கொவிட் மத்திய நிலையத்திற்கு அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஈடுபடுகின்றது.

