கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை -ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீற்கப்பட்டுள்ளது.
இச்சடலம் இன்று (12) கரையொதுங்கியதாகவும் தெரியவருகின்றது.
வெள்ளை நிறத்தில் கட்ட கை சேட் அணிந்துள்ளதாகவும், 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரியவருகின்றது.
யாருடைய சடலம் என்பது இன்னும் தெரியவரவில்லை எனவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கரையொதுங்கிய சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .