தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2000 கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழவழக்கு
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,746 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 2600 க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.