Header Ads

Breaking News
recent

3 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவனால் நேர்ந்த விபரீதம்


03 வயது பிள்ளையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் போில் 14 வயது சிறுவனொருவன் மினுவாங்கொடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



சிறுவன் இப் பிள்ளையின் உறவினரென்பது தற்போது தொியவந்துள்ளது. இது சமூக சீர்கேடான செயற்பாடு எனவும் தற்போது வழந்து கொண்டு வரும் சமூகம் மனித நேயத்தை மறந்து நாட்டின் நற்பிரஜை ஆக இல்லாமல் சீர் கேடான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகின்றனர் என போலீஸ் அத்தியேட்சகர் தெரிவித்தார்.

மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக பொலிசார் தொிவித்தார்.

குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தொழில் நிமித்தம் வெளியில் செல்வதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார்.

விளையாடிவிட்டு வருவதாகக் கூறி குறித்த சிறுமியை சந்தேக நபரான சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இச்சந்தர்ப்பத்திலேயே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தொிவிக்கின்றனர்.

மேற்படி சிறுமி கம்பஹா மாவட்ட தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சிறுவன் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Powered by Blogger.