Header Ads

Breaking News
recent

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (29.01.2021) இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்!!


வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (29.01.2021) இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற கார் பிரதான கண்டி வீதியில் செல்ல முற்படும்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குடும்பப் பெண் மீது மோதிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது .

இதன்போது காயமடைந்தவர் உடனடியாக பொலிஸாரினால் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விபத்தை ஏற்படுத்திய கார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.