Header Ads

Breaking News
recent

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுப்பு !!!


கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஊடக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய இவ் ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்தி பூங்கா முன் முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது. உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் , தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேசமே பதில் சொல், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியராளர் எங்கே? படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு போன்ற கோசங்களை எழுப்பினர்.
Powered by Blogger.