திருகோணமலையில் ஒரு கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது!!!

(அப்துல்சலாம் - யாசீம்)
திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்த எச்.நிரோஸன் 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டு செல்வதாக திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரும் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து விரைந்த அதிரடி படையினர் குறித்த சந்தேக நபரை குச்சவெளி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில் கைது செய்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அவருடைய மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.