தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் 878 நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை!!!!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 86 நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் 878 நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேல் மாகாணத்தில் சுமார் 785 நிறுவனங்களில் உரியமுறையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தவிர்த்து செயற்பட்ட 86 நிறுவனங்களின் முகாமையாளர்கள் உள்ளிட்ட பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் இதுவரை 6 ஆயிரத்து 919 நிறுவனங்களில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவற்றுள் 5 ஆயிரத்து 918 நிறுவனங்களில் உரியமுறையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை தவிர்த்து செயற்பட்ட 1001 நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.