இலங்கை தமிழ் ஊடகங்களில் திடீரென பதவி விலகிய சில பிரபலங்கள்!!!

இலங்கை தமிழ் ஊடகங்களில் கடந்த ஓரிரு தினங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக பிரபல அறிவிப்பாளர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் பிரபல வானொலியான சூரியன் FM இல் கடமையாற்றிய சந்துரு மற்றும் மேனகா ஆகியோர், திடீரென தமது பதவி விலகலை அறிவித்திருந்தனர்.
இந்த இருவரும் தமது பேஸ்புக் ஊடாக ரசிகர்களுக்கு தமது விலகல் தொடர்பிலான அறிவிப்பை விடுத்திருந்தமை.
தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, தாம் பதவி விலகியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஸ்டார் தமிழ் வானொலியின் பிரபல அறிவிப்பாளரான சக்சிவர்ணன் (Rj சக்சி) தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
மேலும், UTV தொலைக்காட்சியில் கடமையாற்றி வந்த பிஸ்ரின் மொஹமட்டும் பதவி விலகலை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.