காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் : டாக்டர் ஏ. லதாகரன்!!!!
(திருமலை - நிருபர்)
இன்று (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட COVID-19 கூட்டமானது கௌரவ ஆளுனர் அனுராதா யகம்பத் தலமையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்பார்வையிலும் நடைபெற்றது.இதன் போது சுகாதார துறையினர் பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சமூகமளித்து இருந்தார்கள்.
காத்தான்குடி தனிமைபடுத்தலானது தொடர்ச்சியாக 16 நாட்களுக்கு மேலாக அமுலில் இருந்து கொண்டு இருக்கின்றது. இதன் பிரகாரம் எமது சுகாதார துறையினரால் மோற்கொள்ளப்பட்ட PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையிலும் எங்களது தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையின் பிரகாரமும் இன்று எமது சுகாதார துறையினரால் மாவட்ட செயலணிக்கு காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 18 கிராமசேவகர் பிரிவில் 10 பிரிவை தனிமைபடுத்தலுக்கு உட்படுத்துவதாக சிபாரிசு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் இவ் 10 கிராம சேவகர் பிரிவில் உள்ள எல்லைகளை தீர்மானிப்பதற்கு பொலிஸார், இராணுவம், பிரதேச செயலாளர்கள், சுகாதார துறையினர் அனைவரும் சேர்ந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றார்கள்.
தனிமைபடுத்தப்பட்ட 10 சுகாதார பிரிவுகளிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் கட்டுப்பாடுகளுடன் கட்டம்கட்டமாக தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.




