Header Ads

Breaking News
recent

திருகோணமலை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவை இனங்கள்!!!



வெளிநாட்டுப் பறவை இனங்கள் சில திருகோணமலை - கிண்ணியா பகுதிகளில் பருவகால இடப்பெயர்வு செய்து மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இப் பறவைகள் கூட்டம் கூட்டமாக கண்ணா காட்டுப்பகுதியில் மாலை வேளைகளில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

கிண்ணியா கலப்பு பகுதியானது ஒரு புறம் கடல் பகுதிகளையும் மறுபுறம் பசுமையான இடங்களையும் கொண்டுள்ள இடமாகும்.

இதனை மையமாகக் கொண்டு கொக்குகள் இடம்பெயர்ந்து பிரதேசத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

இது இங்குள்ள மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு வியப்பு மிக்க காட்சிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.