பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ”ஒரே வீதி ஒரே ஒழுங்கை” சீன திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தரத் தயாராகியுள்ளதாக உத்தியோகபூர்வ மூலத்தை மேற்கோள்காட்டி அந்த ட்விட்டர் தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
‘ஒரே வீதி – ஒரே ஒழுங்கை’ சீன செயற்றிட்டத்தின் கீழ் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார பாலம் ஒன்றை திட்டமிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விமான, ரயில், தரை வழி ஊடாக பயணிக்கக் கூடிய இந்த செயற்றிட்டத்திற்காக 68 டொலர் பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சீன, பாகிஸ்தான் ஒன்றிணைந்த கைத்தொழில், முதலீடு உள்ளிட்ட பல செயற்றிட்டங்கள் இதனூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.