கட்டுப்பாடுகளுடன் மூதூர் பிரதேசத்தில் தொழுகை நடத்த அனுமதி!!!
Covid 19 கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சென்ற 24ஆம் திகதி மூடப்பட்ட அனைத்துப் பள்ளிவாயல்களும் இன்று (04) ஆம் திகதி திங்கள் கிழமை அஸர் தொழுகையுடன் திறப்பதற்கான அனுமதியை மூதுார் வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அத்தியட்சகர் என்.எம்.எம். கஸ்ஸாலி அனுமதியளித்துள்ளதாக அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் தஸ்ரிக் மௌலவி எமது செய்திப்பிரிவு ஊடாக அனைத்து மகல்லாவாசி பள்ளிவாயல் தலைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றார்.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு தொழுகைக்கு 25 பேர் மட்டும் தொழுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
