மட்டக்களப்பில் கிளைமோர்ரக குண்டு ஒன்று மீட்பு!!
மட்டக்களப்பு வாழைச்சேனை முல்லைநகர் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கிளைமோர் ரக வெடிபொருள் ஒன்றினை போலீசார் இன்று மீட்டுள்ளனர்.
குறித்த வீதியில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற போலீசார் வெடிபொருள் எனக் கருதி அதனை மீட்கும் நடவடிக்கையில் வாழைச்சேனை போலீசார் ஈடுபட்டனர்.
அந்த வீதியின் அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த யுத்த காலத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கான பாதுகாப்பு வேலி. அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிளைமோர் மீட்கப்பட்ட காணியினுள் தற்போது கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


