Header Ads

Breaking News
recent

வவுனியாவில் முடக்கப்பட்டது பட்டானிச்சூர்



வவுனியா பட்டாணிச்சூர் பகுதியினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து இன்று  காலை அப்பகுதி சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டது.



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டாணிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த கர்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை வவுனியா சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


அந்த வகையில் அவர்களது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கிய பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் ஒழுங்ககைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி, குள வீதி, பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விசாரணைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Powered by Blogger.