Header Ads

Breaking News
recent

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை !!!



மீட்டியாகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் நேற்று (25) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மீட்டியாகொடகமயை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கையொன்று துண்டாக்கப்பட்டிருந்ததோடு குறித்த கையின் பகுதி மீட்டியாகொட நாற்சந்தியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.

இக்கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
Powered by Blogger.