போர்குற்றம் குறித்து கவனஞ் செலுத்துமாறு இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம்!!!!
இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறையை ஏற்படுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டுர வேண்டும் என இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி இந்திய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாத நிலையில் அவர்களை பன்னாட்டு சட்டங்களின் முன் நிறுத்த மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்,
ஆகவே அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசு அதற்கான தார்மீகக் கடமையிலிருந்து தவறிவிடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆம் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது,
மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி இலங்கை மீதான புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,