Header Ads

Breaking News
recent

இக்கிரிகொள்ளாவ சந்தியில் நேற்று இரவு பாரிய விபத்து!!!


A9 வீதியில் வவுனியா பகுதியை நோக்கி பயணித்த கெண்டைனருக்கு இக்கிரிகொள்ளாவ சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று குறுக்கே பாய்ந்ததிலே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

குறுக்கே பாய்ந்த மோட்டார் சைக்கிளை மோதிவிடாது கெண்டைனரை சாரதி ஓரம்கட்ட பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிதொரு மோட்டார் சைக்கிளையும் அருகிலிருந்த காரையும் மோதிவிட்டு அதற்கருகிலிருந்த மரத்தையும் வேரோடு சரித்துவிட்டு அதையடுத்து நின்ற ஆட்டோவையும் அடுத்தடுத்து நின்ற இரு மோட்டார் சைக்கிள்களை நசுக்கிவிட்டு இரண்டு கடைகளைத் தாண்டிச்சென்று கெண்டைனர் சரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த வாகன விபத்தில் கெண்டைனர், கார், முற்சக்கர வண்டி உட்பட சில மோட்டார் சைக்கிள்கலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சிய பொலீசார் முண்ணெடுத்து வருகின்றனர்.





Powered by Blogger.