Header Ads

Breaking News
recent

கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த மலையக மாணவர்களுக்கு சொந்த மாவட்டங்களில் நியமனம்!!!


(டீ.எஸ்.டீ.தூயவன்)
கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த மலையக மாணவர்களுக்கான நியமனங்கள் வழங்குவதில் தொடர்ந்து இழுபறிகள் நிலவிவந்த நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சுடன் தொடர்ச்சியாக நடத்திவந்த பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் சொந்த மாவட்டங்களிலேயே அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிநெறியை முடிந்தவர்களுக்கான நியமனம் வழங்கும் விண்ணப்பங்கள் கொவிட் நெருக்கடி காரணமாக இம்முறை ஒன்லையின் முறையில்தான் கோரப்பட்டிருந்தது.

கடந்தகாலத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் கையளித்திருந்த தருணங்களில்கூட மலையகத்தில் பயிற்சியை முடித்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான பின்புலத்தில் ஒன்லையின் முறை எவ்வளவு தூரம் கைகொடுக்குமென்ற சூழல் நிலவிய தருணத்தில் செந்தில் தொண்டமான் இந்த விவகாரத்தை கையில் எடுத்து நேரடியாக கல்வி அமைச்சுடன் கடந்த ஒருமாதகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான நியமனங்களை சொந்த மாவட்டங்களிலேயே பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதன் பிரகாரம் ஊவா மாணாத்தில் 53 பேருக்கும், மத்திய மாகாணத்தில் 188 பேருக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 42 பேருக்கும், மேல் மாகாணத்தில் 48 பேருக்கும் நியமனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Powered by Blogger.