Header Ads

Breaking News
recent

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கை!!!!


கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் தேடப்பட்டு வருகின்றது.


ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டதாக பாராளுமன்ற பிரதம வேதியர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


அதனபடி ஹக்கிமுடன் நெருங்கி பழகியவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுய தனிடைப்படுத்தலுக்கு உட்படுத்த CCTV காட்சிகளை பார்வையிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளை அடுத்த வாரமளவில் PCR பரிசோதனைக்கும் தொழினுட்ப ரீதியான பரிசோதனைகளுக்கும் உட்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளாதாகவும், எனவே தன்னுடன் கடந்த 10 நாட்களில் நெருங்கி பழகியவகள் அனைவரும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு ரவூப் ஹக்கீம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


ரவூப் ஹக்கீமுடன் சேர்த்து இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


தற்போது ஹிக்கடுவ பகுதியில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ள தயாசிறி, இன்று டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
Powered by Blogger.